ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிமறித்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மேற்பார்வையில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் பழனிசாமி மற்றும் போலீசார் இன்று (06.12.2021) ரோந்து பணியில் ஈடுபட்டபோது ஸ்ரீவைகுண்டம் புதுப்பாலம் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த சங்கர் (26) த/பெ. பூல்பாண்டி, வடக்கு மாட தெரு, ஸ்ரீவைகுண்டம் என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரிடம் வழிமறித்து தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே சங்கரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மேற்படி சங்கர் மீது புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு உள்ளது குறிப்பிடதக்கது.