மறைந்த முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலலிதாவின் நினைவு தினம் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய அஇஅதிமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெ.ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிச. 5-ஆம் தேதி காலமானாா். அவரது மறைவை யொட்டி ஒவ்வொரு ஆண்டும் அதிமுகவினா் இரங்கல் ஊா்வலம், திருஉருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியை மேற்கொள்கின்றனா்.
அதன்படி நிகழாண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஜெயலலி தாவின் 5-ஆம் ஆண்டு நினைவு தினம் பல்வேறு இடங்களில் அனுசரிக்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, ஓட்டப் பிடாரம் கிழக்கு ஒன்றியத்தில், அதிமுக ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவருமான காந்தி காமாட்சி தலைமையில், ஓட்டப் பிடாரம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட குறுக்குச்சாலை, பசுவந்தனை, வேப்பலோடை உள்ளிட்ட அனைத்து கிராம பகுதிகளிலும், அலங்கரித்து வைக்கப்பட்ட மறைந்த ஜெயலலிதாவின் திருஉருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி மரியாதை செய்யப்பட்டது.
இந்நிகழ்வில், ஒன்றிய,நகர, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.