தூத்துக்குடி மாநகரில் அமமுகவை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
தூத்துக்குடி முன்னாள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பகுதி செயலாளர் ஜான் சாமுவேல் தர்மராஜ் ஏற்பாட்டில் சாமிவேல் தலைமையில் 50க்கும் மேற்பட்ட அமமுகவினர் இன்று தூத்துக்குடி புதுகிராமத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாநகர தலைவர் முரளிதரன் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர்.
இதில், மாடசாமி, வேல்ராஜ், விநாயகமூர்த்தி, ராஜா, அஜித்குமார், ஜெய்சிங், சேகர், அதிபன்குமார், இமானுவேல், ராம்குமார், மண்டல தலைவர்களான ஜசன்சில்வா, சேகர், பிரபாகரன், மாவட்ட செயலாளர் கோபால், வார்டு தலைவர்கள் கிருஷ்ணன், கோபி மற்றும் பலர் உடனிருந்தனர்.