தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.
தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வருகை தந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரையண்ட் நகர், அம்பேத்கர் நகர், ரகுமத் நகர் உள்ளிட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி- எட்டயபுரம் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்வின் போது கனிமொழி எம்பி, அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கீதா ஜீவன், அனிதா ராதா கிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், சட்ட மன்ற உறுப்பினர் சண்முகையா, பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.