• vilasalnews@gmail.com

தூத்துக்குடி பிரையண்ட் நகரில் முதல்வர் ஆய்வு!

  • Share on

தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பிரையண்ட் நகரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக, சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது.

தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. சுமார் ஒரு வாரமாக மழை வெள்ளம் வடியாத நிலையில் உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை  ஆய்வு மேற்கொள்ள தற்காக சென்னையில் இருந்து பகல் 12.30 மணி விமானம் மூலம் தூத்துக்குடிக்கு 1.50க்கு வருகை தந்தார்.  பின்னர் அவர், தூத்துக்குடி பிரையண்ட் நகர், அம்பேத்கர் நகர், ரகுமத் நகர் உள்ளிட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.  

அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி- எட்டயபுரம் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குகிறார்.

இந்நிலையில், பிரையண்ட் நகர் தேங்கியுள்ள மழைநீர் பகுதிகளை முதலாவதாக மாலை 3 மணி அளவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வின் போது கனிமொழி எம்பி, அமைச்சர்கள் கே.என்நேரு, கீதா ஜீவன், அனிதா ராதா கிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, சட்ட மன்ற உறுப்பினர்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, ஊர்வசி அமிர்தராஜ், பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், பிரையண்ட் நகர் பகுதிசெயலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

  • Share on

நகர்புற உள்ளாட்சி தேர்தல் - தூத்துக்குடி மாவட்ட தேமுதிக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை!

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!

  • Share on