தூத்துக்குடி மாவட்ட தேமுதிக தலைமை அலுவலகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும். தேமுதிகவில் அடிப்படை உறுப்பினராக இருந்தால் கூட எந்த பதவிக்கும் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் . டிசம்பர் 1-ஆம் தேதி முதல் 7ம் தேதி வரை அந்தந்த மாவட்ட தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெற்ருக்கொள்ளலாம்.
மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை அந்தந்த மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்எஸ்எஸ்.யூ.சந்திரன் தலைமையில் மாவட்ட தேமுதிக தலைமை அலுவலகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், வரும் மாநகராட்சி தேர்தலில் 60வார்டுகளில் வேட்பாளர் நிறுத்தி கழக வெற்றிக்கு பாடுபடுவது, தேமுதிக உறுப்பினர்கள் மாநகராட்சி மாமன்றத்தில் பங்கு பெற வேண்டும் என்றும், பருமழை மற்றும் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மாநகரபகுதி சார்பாக சம்மந்தபட்ட அதிகரிகளிடம் பொது மக்களின் குறைகளை மனுவாக கொடுத்து பொது மக்களின் குறை தீர்க்கவேண்டும் என்றும், மாவட்டத்தில் விடுபட்டுள்ள புதிய நிர்வாகிகளை நியமித்து அறிவிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றபட்டது.மேலும், போட்டியிட விருப்பமனு பெற்று கொள்ளப்பட்டது.
இதில் மாவட்ட பொருளாளர் விஜயன், மாவட்ட துணை செயலாளர் ராமகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் தயாளலிங்கம், அலெக்சாண்டர், பெதுகுழு உறுப்பினர் இராஜபொம்மு, அணி நிர்வாகிகள் மாணவரணி செல்வம், ஸ்டிபன்ராஜ், அக்பர், பகுதி செயலாளர்கள் நாராயணமுர்த்தி, சம்சூதீன், அரசமுத்து, தோப்பு அரசமுத்து, வட்ட செயலாளர்கள்
மைதீன், சுப்பு, ராஜா, இருளப்சாமி, தாத்தாசாமி, பாலன், ஜெகதீசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.