தூத்துக்குடியில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.
தூத்துக்குடியில் பெய்த பருவமழையால் தாழ்வான சில பகுதிகளில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தூத்துக்குடி மாநகரம் எல்லை மாப்பிள்ளையூரணி ஊராட்சி ஆரம்ப பகுதிகளில் தேங்கிய மழைநீரை கோமஸ்புரம் குளத்திற்கு கொண்டு செல்லும் வகையில் போர்கால அடிப்படையில் சிறிய கால்வாய் அமைத்து வழிதடத்தின் மூலம் மழைநீரை அப்புறப் படுத்தும் பணியை சமூகநலத் துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்து விரைவாக மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அருகில், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பயிற்சி கலெக்டர் சுப்புலட்சுமி, கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், தாசில்தார் ஜஸ்டின், உணவு வழங்கல் தாசில்தார் செல்வக்குமார், மாவட்ட மாணவரணி துணைச்செயலாளர் வக்கீல் பாலகுருசாமி, மாவட்ட பிரதிநிதி சப்பாணிமுத்து, ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் ஸ்டாலின், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, கிராமநிர்வாக அலுவலர் விக்னேஷ், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா, போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் அல்பட், மணி, முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார், மாநகர இளைஞர் அணி துணைச்செயலாளர் அருண்சுந்தர், உள்பட பலர் உடனிருந்தனர்.