தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் போட்டியிட வடக்கு மாவட்ட திமுகவினர் விருப்பமனு அளித்தனர்.
தூத்துக்குடி நகர்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதையொட்டி எட்டையபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாநகர விவசாய தொழிலாளர் நல அணி செயலாளர் முத்துவேல், மாநகர மகளிர் அணி ஜெயக்கனி, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், நிர்மல்ராஜ், பகுதி இளைஞர் அணி செயலாளர் ரவி, வட்டச்செயலாளர்கள் சண்முகராஜ், நாராயணன், கண்ணன், அண்ணாதுரை, பேபி ஏஞ்சலின், முத்துலட்சுமி, அதிர்ஷ்டமணி, ஜெனிட்டா, அமல்ஜோஸ், முருகேஸ்வரி, பாமா, மாரிமுத்து, தங்கம், உள்பட பலர் விருப்ப மனு அளித்தனர்.
நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், பொருளாளர் ரவீந்திரன், ஆதிதிராவிட நல அணி செயலாளர் பரமசிவம், மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், மாவட்ட மாணவரணி துணைச்செயலாளர் பாலகுருசாமி, மாநகர தொண்டரணி செயலாளர் முருகஇசக்கி, மாநகர இளைஞர் அணி துணைச்செயலாளர் சங்கரநாராயணன், ஆதிதிராவிட நல அணி துணைச்செயலாளர் பால்ராஜ், வர்த்தக அணி துணைச்செயலாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், நிர்மல்ராஜ், மேகநாதன், ஜெயக்குமார், வட்டசெயலாளர்கள் பொன்ராஜ், தனசேகரன், தங்கம், வட்டப்பிரதிநிதிகள் சௌந்தர்ராஜன், ராஜன், தங்கம், வசந்தாராணி, கிறிஸ்டோபர், போல்பேட்டை பகுதி பிரதிநிதி லிங்கராஜா, நிர்வாகிகள் செல்லப்பாண்டி, இளைஞர் அணி குட்டி, சிவா, முனிஸ்வரன், கற்குவேல், ஸ்டாலின், நரேஷ், ஜோஷ்வா, ஜெயக்குமார், ராஜசேகர், லிங்கசெல்வன், வெள்ளத்துரை, உட்பட பலர் கலந்து கொண்டனர்.