ஆதனூர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த விவசாயி தளவாய் சாமி குடும்பத்திற்கு, ஓட்டப்பிடாரம் கிழக்கு அஇஅதிமுக ஒன்றிய செயலாளர் காந்தி( எ) காமாட்சி நிவாரண உதவி வழங்கி ஆறுதல் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, எப்போதும் வென்றான் அருகே உள்ள ஆதனூர் கிராமத்தில் கடந்த இரு தினங்க ளுக்கு முன் ஆற்றை கடக்கும் போது ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விவசாயி தளவாய் சாமி (வயது58) என்பவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து அவர்களின் குடும்பத்தாருக்கு ஓட்டப்பிடாரம் கிழக்கு அஇஅதிமுக ஒன்றிய செயலாளர் காந்தி (எ) காமாட்சி நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரண நிதி வழங்கினார். இந் நிகழ்வில் ஒன்றிய கவுன்சிலர் சண்முகத்தாய் மேகலிங்கம், ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் முருகன், கூட்டுறவு சங்கத் தலைவர் சுப்புராஜ், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தவசி இருளம்மாள், கிளை செயலாளர் முருகன், ஊர் அம்பலம் முனிய சாமி, மொட்டையசாமி, சவுந்த ராஜன், இராமகிருஷ்ண, பொன்னு ச்சாமி, சண்முகராஜ், மாப்பிள்ளை சாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.