• vilasalnews@gmail.com

திணறும் மாநகராட்சி... திண்டாடும் பொதுமக்கள்... குடும்பத்திற்கு ரூ.10,000... இந்து மக்கள் கட்சி கோரிக்கை!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக தூத்துக்குடி மாநகராட்சியின் முக்கிய பகுதிகள் முழுவதும் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி அவதிபட்டு வருவதாக இந்து மக்கள் கட்சி புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் தா.வசந்த குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :

தூத்துக்குடி மாவட்டத்தில் மழையின் காரணமாக  மாவட்டத்தின் தலைநகரான தூத்துக்குடி மாநகராட்சியின் முக்கிய பகுதிகள் முழுவதும் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு மக்கள் பெரும் துயரத்தில் இருந்து வருகின்றனர். 

நிரந்தர தீர்வு பற்றி சிந்திக்காமல்,  வருடாவருடம் மழை பெய்யும் போதெல்லாம் இப்பகுதிகளில் தண்ணீர் தேங்குவதும், அதனை மின்மோட்டார் மற்றும் அப்பகுதியில்  தற்காலிகமாக ரோட்டை உடைத்து வடிகால் அமைப்பது, நிலைமை கட்டுப்படுத்தப்பட்ட பின்பு மீண்டும் அப்பகுதியில் தார் சாலை அமைப்பது வழக்கமாக மாநகராட்சியின் செயல். ஆனால் 5 நாட்களாகியும் இந்த முறை அதுவும் சரிவர செய்யாமல்  திணறிக் கொண்டிருக்கிறது மாநகராட்சி நிர்வாகம்.

மாநகராட்சியில் பலதரப்பட்ட பொறியாளர்கள், அதிகாரிகள் இருந்தும்கூட இந்த சூழ்நிலையை கையாளத் தெரியாமல் மாநகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் திணறிக் கொண்டிருக்கிறது. 

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு உடனடியாக    குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச பொருட்களோடு, ரூ 10,000 வழங்கிட வேண்டும் மேலும் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு மின் கட்டணம் , வீட்டு வரி, தண்ணீர் கட்டணம் ரத்து செய்திட இந்து மக்கள் கட்சி சார்பாக கோரிக்கை வைக்கிறோம். என தெரிவித்துள்ளார்.

  • Share on

தூத்துக்குடியில் சானிடரி, நாப்கின்கள் தயாரித்தல் பயிற்சி தொடங்கப்பட்டது.

ஆதனூர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ஒன்றிய அதிமுக நிவாரண உதவி!

  • Share on