தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் மக்கள் பங்கேற்புடன் கூடிய வளர்ச்சி திட்டத்திற்கான ‘ சானிடரி, நாப்கின்கள் தயாரித்தல் பயிற்சி தொடங்கப்பட்டது.
தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் மூலம் சுயஉதவிக்குழு மற்றும் பல்வேறு குடும்பங்களை சார்ந்த 18 முதல் 35வயது இளைஞர்களை கண்டறிந்து அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் வளர்ச்சியடைய சானிடரி, நாப்கின்கள் தயாரித்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் பயிற்சி மாப்பிள்ளையூரணி ஊராட்சி அளிவிலான கூட்டமைப்பு அலுவலகத்தில் தொடங்கப்பட்டது.
இப்பயிற்சிக்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமை ஏற்று குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலர் முத்தமிழ் செல்வன் சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் உதவி திட்ட அலுவலர் பிரபாகரன், வட்டார இயக்க மேலாளர் முத்துமாரி, தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் செயல் அலுவலர் ராதா, திட்ட செயலர் மகேஸ்வரன், பயிற்றுனர் அன்னலட்சுமி, ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, உள்பட ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.