• vilasalnews@gmail.com

பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி பாஜக சார்பாக மனித சங்கிலி போராட்டம்!

  • Share on

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி தூத்துக்குடி பாஜக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், இன்று தூத்துக்குடி மாநகரில் உள்ள புதிய மாநகராட்சி அருகே தூத்துக்குடி மாவட்ட பாஜக ஒபிசி அணி மற்றும் அமைப்பு சாரா அணி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

ஓபிசி அணி மாநில செயலாளர் விவேகம் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட தலைவர் தங்க பாண்டியன், அமைப்பு சாரா அணி மாவட்ட தலைவர் சித்திரைவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாஜக தெற்கு மாவட்ட தலைவர் பால்ராஜ், வடக்கு மாவட்ட தலைவர் ராமமூர்த்தி ஆகியோர் வரவேற்று பேசினர். 

போராட்டத்தில், எஸ்சி அணி மாநில செயலாளர் சிவந்தி நாராயணன், அமைப்பு சாரா பிரிவு மாநில செயலாளர் தேவகுமார், வணிகர் பிரிவு மாநில செயலாளர் சத்தியசீலன், வழக்கறிஞர்  சண்முக சுந்தரம், சந்தனகுமார், மாவட்ட பொது செயலாளர் விஎஸ்ஆர் பிரபு, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் சார்பில் விருப்ப மனு

விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றினால் ரூபாய் ஒரு லட்சம், பாராட்டுச் சான்றிதழ் - ஆட்சியர் தகவல்

  • Share on