• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் புதிய தமிழகம் கட்சி தலைவர் நேரில் ஆய்வு!

  • Share on

தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை புதிய தமிழகம் கட்சிதலைவர் கிருஷ்ணசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு  மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரிரு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக மாநகரில் பல பகுதிகளிலும் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மழைநீரை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன.

இதனையடுத்து, இன்று தூத்துக்குடி வந்த  புதிய தமிழகம் கட்சிதலைவர் கிருஷ்ணசாமி பிரையண்ட்நகர், சுப்பையா முதலியாபுரம், முத்தமாள் காலனி, ரஹமத் நகர், ஹவுசிங் போர்டு போன்ற மழை நீரால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில்  நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதில், புதிய தமிழகம் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கனகராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

  • Share on

தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆய்வு!

பிஎம்டி அறக்கட்டளை சார்பாக தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

  • Share on