புரெவி புயல் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடியில் இருந்து சென்னை, பெங்களூருக்கு நாளை (வியாழக்கிழமை) செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் இன்று இரவு இலங்கையில் கரையைக் கடந்து டிசம்பர் 4 ஆம் தேதி அதிகாலை குமரி - பாம்பன் இடையே கரையைக் கடக்க உள்ளது.
இந்நிலையில், புயல் காரணமாக தென் தமிழகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து கிளம்பும் சென்னை மற்றும் பெங்களூரு விமானங்கள் நாளை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது