• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆய்வு!

  • Share on

தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன்  ஆய்வு செய்து, குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை விரைந்து வெளியேற்ற அமைச்சர் நடவடிக்கை எடுத்து, மழைநீரை வெளியேற்றும் பணியை பார்வையிட்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரிரு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக மாநகரில் பல பகுதிகளிலும் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மழைநீரை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த பணிகளை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சென்று பார்வையிட்டார். பின் மழைநீரை விரைந்து அகற்ற அறிவுறுத்தினார்.

இதனையடுத்து, இன்று பிரையண்ட்நகர், கட்டபொம்மன் நகர், போல்டன் புரம், சுப்பையா முதலியாபுரம்   பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை விரைந்து வெளியேற்ற  நடவடிக்கை எடுத்து, மழைநீரை வெளியேற்றும் பணியை பார்வையிட்டார்.

இதில், பகுதி செயலாளர் ராமகிருஷ்ணண் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

  • Share on

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்_தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுகவினர் விருப்ப மனு

தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் புதிய தமிழகம் கட்சி தலைவர் நேரில் ஆய்வு!

  • Share on