தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளித்தனர்.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதையொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுகவினர் மாவட்ட அலுவலகத்தில் விருப்ப மனு அளித்து வருகின்றனர்.
மாநகராட்சி தேர்தலில் சரண்யா, ரூபவள்ளி, சோமசுந்தரி, உள்பட பலர் விருப்பமனுவை சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவனிடம் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன்பெரியசாமி, மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகம், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், அவைத்தலைவர் ஏசுதாஸ், மாவட்ட மாணவரணி துணைச்செயலாளர் பாலகுருசாமி, தொண்டரணி துணைச்செயலாளர் ராமர், மாநகர தொண்டரணி செயலாளர் முருகஇசக்கி, துணைச்செயலாளர் மணி, மாநகர இளைஞர் அணி துணைச்செயலாளர்கள் செல்வின், சங்கரநாராயணன், அருண்சுந்தர், ஆதிதிராவிட நல அணி துணைச்செயலாளர் பால்ராஜ், மாவட்ட பிரதிநிதிகள் கதிரேசன், ராஜ்குமார், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், வட்டசெயலாளர்கள் சண்முகராஜ், சுந்தரவேல், முன்னாள் கவுன்சிலர்கள் மீனாட்சிசுந்தரம், ஜெயசிங், மற்றும் கருணா, கீதா செல்வமாரியப்பன், பிரபாகர், அல்பட், தங்கமாரியப்பன், லிங்கராஜா, கந்தன், சரவணன், சாமிநாதன், கனகவேல், ஸ்டீபன், ஷெல்டன், சோபியா, ஜெயலட்சுமி, அசோக்குமார், ராம்வெங்கடேசன், மதியழகன், உத்திர பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.