தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் மாவட்ட அலுவலகத்தில் விருப்பமனு அளித்தனர்.
தூத்துக்குடி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்பமனுக்கள் வழங்கப்பட்டு வருகின்றனர்.
அதனடிபடைடியில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகத்திற்குட்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி, காயல்பட்டிணம் நகராட்சி, ஸ்ரீவைகுண்டம், பெருங்குளம், சாயர்புரம், ஏரல், ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம், நாசரேத், தென்திருப்பேரை, ஆத்தூர், ஆறுமுகநேரி, காணம், உடன்குடி ஆகிய பேரூராட்சிகளில் உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவோருக்கான விருப்பமனு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
மாநகராட்சி தேர்தலில் போட்டியிட பிரனிலா, சந்திரா, விஜயலட்சுமி, ஜெயந்தி, உள்பட பலர் முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதனிடம் விருப்பமனு அளித்தனர்.
நிகழ்ச்சியில், மாவட்ட அவை தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட துணை செயலாளர் யூனியன் சேர்மன் வசந்தா மணி, இணைச்செயலாளர் செரினாபாக்கியராஜ், ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன், மாவட்ட அணி செயலாளர்கள் தனராஜ், பிரபாகர், விக்னேஷ், முன்னாள் மாவட்ட அரசு வழக்கறிஞர் கோமதி மணிகண்டன், பொதுகுழு உறுப்பினர் மாரியப்பன், பகுதி செயலாளர்கள் ஜெய்கணேஷ், பொன்ராஜ், வழக்கறிஞரணி இணை செயலாளர் முனியசாமி, பகுதி இளைஞரணி செயலாளர்கள் திருச்சிற்றம்பலம், புல்டன் ஜெசின், வட்ட செயலாளர்கள் அசோகன், சங்கர், பகுதி சிறுபான்மை பிரிவு செயலாளர் அசன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் சத்யாலட்சுமணன், முன்னாள் கவுன்சிலர்கள் சந்தனபட்டு, முத்துமதி செல்லப்பா, பொன்ராஜ், மற்றும் பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜா, ஜெயபாண்டி, தாமஸ், ஈஸ்டர், நாராயணன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.