கயத்தாறில் முன்விரோதம் காரணமாக பெண்ணை கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
கயத்தாறு வடக்கு இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் தனது கணவருடன் நேற்று (28.11.2021) அவர்களது வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்த போது அங்கு வந்த வீரபுத்திரன் (24), த/பெ. முத்தையா, பிள்ளையார் கோவில் தெரு, வடக்கு இலந்தைகுளம், என்பவர் முன்விரோதம் காரணமாக அந்த பெண்ணை அவதூறாக பேசி கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் கயத்தாறு காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஆறுமுகம் வழக்குப்பதிவு செய்து வீரபுத்திரனை கைது செய்தார்.