ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மாசு படவில்லை என ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் மற்றும் தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார இயக்கத்தினர் தெரிவித்தனர்.
ஸ்டெர்லைட் ஆலை ஆதரவு கூட்டமைப்பினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28.11.2021) தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத்தில் வைத்து பேட்டி அளித்தனர்.
சமூக ஆர்வலர் நான்சி கூறுகையில், அண்ணா பல்கலைக்கழகம் ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள். அதில் காற்றின் மாசு அளவு வெளியிடப்பட்டுள்ளது. அதில் தூத்துக்குடி நகரின் மாசு குறித்து சிப்காட் உட்பட மூன்று இடங்களில் வைக்கப்பட்டுள்ள அளவீட்டு கருவிகளின் மூலம் ஆய்வுகள் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி நகரம் எப்போதும் ஒரே மாதிரியான மாசுபட்ட சூழ்நிலையிலேயே உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை இயங்கிய போது எந்த அளவு மாசு இருந்ததோ அதே அளவு மாசு தான் தொடர்ந்து இருக்கிறது தூத்துக்குடி நகரம் மாசுபடுவதற்கு இங்கே இயக்கப்படும் வாகனங்கள் மற்றும் சாலையோரங்களில் உள்ள தூசுகளும் காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் தேவையற்ற குற்றச்சாட்டுகளை கூறி மக்களை திசை திருப்பி போராட செய்து இந்த ஆலையை கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக மூட வைத்துள்ளனர். இந்த ஆலை மூடப்பட்டு அதன் காரணமாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு போலி எதிர்ப்பு போராளிகள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள். போலி போராட்டக்காரர்களின் பொய்யான குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக கிடைத்த முதல் வெற்றி, இந்த அரசு மக்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என கூறினார்.
வழக்கறிஞர் ஜெயம் பெருமாள் கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக பேட்டி அளிப்பவர்கள் மனு கொடுப்பவர்கள் பணத்திற்காக வருகிறார்கள் என ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் சமூக ஊடகங்களில் கூறி வருகின்றனர். இது வருத்தமளிக்கிறது என்று கூறினார்.
தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார இயக்க தலைவர் தியாகராஜன் கூறுகையில், தற்போது அண்ணா பல்கலைக்கழகம் தூத்துக்குடி மாசு குறித்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தூத்துக்குடியின் உண்மை நிலையை தெரிவித்துள்ளது. எனவே தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கும், மாசுபாட்டிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனவே மக்களின் முதல்வர் பல ஆயிரம் மக்களின் வாழ்வாதாரம் சிறக்க ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு ஆவணம் செய்ய வேண்டும் என்று கூறினார்.
உடன், சாமிநத்தம் பஞ்சாயத்து முன்னாள் துணைத் தலைவர் முருகன், துளசி சோசியல் டிரஸ்ட் இயக்குனர் தனலட்சுமி, துணைத்தலைவர் பரமசிவன், செயலாளர் கல்லை சிந்தா, ஆகியோர் உடனிருந்தனர்.