முத்தும்மாள் காலனி குடியிருப்புகளைச் சுற்றி பல நாட்களாக வடியாமல் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் :
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் இரண்டு மற்றும் ஐந்து ஆகியவற் றை உள்ளிடக்கிய முத்தம்மாள் காலனி 4வது தெரு இணைப்பான அழகர் பள்ளி யின் மேல்புறம் உள்ள பழைய ஷீபா பள்ளி அமைந்து இருக்கும் தெருவின் மேற்கு பகுதிகளில் குடியிருப்புகளைச் சுற்றி பல நாட்களாக வடியாமல் தேங்கி நிற்கும் மழைரால் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க மற்றும் குழந்தை பள்ளிக்குச் செல்ல வீட்டிலிருந்து வெளியே வர முடியாமல் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப் பட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அதனை கண்டித்தும், உடனடியாக மழைநீரை அகற்ற கோரியும் நாங்கள் சாலை மறியலில் ஈடுபட்டு உள்ளோம் என தெரிவித்தனர்.