• vilasalnews@gmail.com

பாஜக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

  • Share on

தூத்துக்குடியில் மத்திய பாஜக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

தூத்துக்குடி மாநகரில் மத்திய பாஜக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்தும், ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளால் மக்களின் பாதிப்பை உணர்த்துகிற வகையிலும், தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில்  நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில செயலாளர் பால்ராஜ், தமிழக காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர்  A.P.C.V.சண்முகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேனியல்ராஜ் ஆகியோர்கள் சிறப்புரையாற்றினார்கள். 

முன்னாள் மாவட்ட தலைவர் A.T.S.அருள், மண்டல தலைவர்கள் ஐசக்சில்வா, சேகர், பிரபாகரன், செந்தூர்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இதில், SC/STபிரிவு மாவட்ட தலைவர் ராஜாராம், மகிளா காங்கிரஸ் தலைவி தனலெட்சுமி, ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்க தலைவர் ராஜ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் நடேஷ்குமார், விவசாய பிரிவு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மைதீன், மாவட்ட சேவாதளம் தலைவர் ராஜா, முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் சந்திரபோஸ், கந்தசாமி, ராதாகிருஷ்ணன், கோபால், மாவட்ட துணை தலைவர்கள் பிரபாகர், அருணாசலம், மாவட்ட செயலாளர்கள் முனியசாமி, அந்தோணி குரூஸ், ராஜா, சேவியர் மிஷியர், வார்டு தலைவர்கள் மகாலிங்கம், சந்திரன், தனுஷ், ரொனால்டு, சூசையாவியாகுலம், ஜோபாய்பச்சேக், ஜான்சன், பாலகிருஷ்ணன், மீராசா, சித்திரைபால்ராஜ், ஜான் சாமுவேல் தர்மராஜ், மைக்கேல், இந்திரா, சாந்தி, செந்தூர்செல்வம், உள்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

  • Share on

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்: ஜோயல் வாழ்த்து!

தூத்துக்குடியில் தேங்கிய மழை நீரை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியல்!

  • Share on