
தூத்துக்குடியில் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தூத்துக்குடி மாவட்ட தலைமை உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றத்தினர் சார்பில் தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட தலைமை உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் நடிகரும், திமுக மாநில இளைஞர் அணி செயலாளருமான உதயநிதிஸ்டாலின் எம்.எல்.ஏ., பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ரத்த தான முகாம், மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதலுடன் கொண்டாடப்பட்து.
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தூத்துக்குடி மாவட்ட தலைமை உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்ற செயலாளர் வழக்கறிஞர் பால்துரை தலைமையில், மாவட்ட துணை செயலாளர் காளீஸ்வரன் முன்னிலையில் நிர்வாகிகள் தங்க மோதிரம் அணிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து, பவுல் அலங்காரம் பார்வையற்றோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு உணவு, உடை மற்றும் மளிகை பொருட்களும், சிலுவைப்பட்டி அன்பு அறக்கட்டளை முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு மதிய உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
இதில், மாவட்ட பொருளாளர் ஷேக்முகமது, துணைத்தலைவர் நட்ராஜ், நிர்வாகிகள் முத்தரசன், செந்தில், தளபதி முருகன், ஜோ, ராஜா, அருண், மணிக்குமார், மனோஜ், சிவமுருகன், பிரதீப், தளபதிசுரேஷ், மணிகண்டன், டினோ உட்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட தலைமை உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்ற செயலாளர் வழக்கறிஞர் பால்துரை தலைமையில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்திருந்தனர்.