• vilasalnews@gmail.com

மெட்டில்பட்டி கிராமத்தில் இயற்கை சீற்றம் தனிய சிறப்பு வழிபாடு!

  • Share on

மெட்டில்பட்டி கிராமத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் இயற்கை சீற்றம் தனிய வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மேல்மருவத்தூர் ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்களின் அருளாசியுடன் தூத்துக்குடி - மதுரை நான்கு வழிச்சாலையில் வெம்பூர் அருகே உள்ள மெட்டில் பட்டி கிராமத்தில், மழை வளம் வேண்டியும், விவசாயம் செழிக்கவும், இயற்சை சீற்றம் தனியவும் மக்கள் நலமுடன் வாழவும், சிறப்பு கூட்டு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான கிராம மக்கள் கலந்துகொண்டு 108 குரு போற்றி, 108 அம்மா போற்றி  படித்து குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர். வேள்விக்குழு இணைச் செயலாளர் கிருஷ்ண நீலா வழிபாட்டை தொடஙகி வைத்தார். 

தொடந்து திருமணமாகி குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு அன்னை அருளிய முறைப்படி வளைகாப்பு நடைபெற்றது. இதனையடுத்து அனைவருக்கும் அன்னையின் திரு உருவப்படம், அருட்பிரசாதம், அன்னதானம் ஆகியவை வழங்கப்பட்டது.

பிரச்சாரக்குழு இணைச்செயலர் முத்தையா ஆன்மிக செற்பொழி வாற்றினார். விழாவில், ஆன்மிக இயக்கம் மாவட்ட தலைவர் சக்தி முருகன், பொருளாளர் கண்ணன், இளைஞர் அணி இணைச் செயலளர் செல்லதுரை, மெட்டில்பட்டி மன்ற பொறுப்பாளர்கள் முனீஸ்வரி, மணிமாலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

பி.எம்.டி அறக்கட்டளையின் நிறுவனர் இசக்கி ராஜா தலைமையில் நலத்திட்ட உதவிகள்!

தூத்துக்குடியில் உதயநிதி பிறந்த நாள் : அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!

  • Share on