• vilasalnews@gmail.com

பி.எம்.டி அறக்கட்டளையின் நிறுவனர் இசக்கி ராஜா தலைமையில் நலத்திட்ட உதவிகள்!

  • Share on
தூத்துக்குடி மாநகரில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறவர் குல கூட்டமைப்பினர் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த தொடா் கன மழை காரணமாக தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம்போல தண்ணீா் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால் ஆங்காங்கே தண்ணீரை அப்புறப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு மறவர் நல கூட்டமைப்பின் ஆலோசகர் விஜயகுமார்  வழிகாட்டுதலின்படி, பி.எம்.டி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் அனைத்து மறவர் நல கூட்டமைப்பின் மாநில இளைஞரணி செயலாளர் இசக்கி ராஜா தலைமையில், அனைத்து மறவர் நல கூட்டமைப்பின் மாநில அமைப்பு செயலாளர் முருகேசன்  உதவியோடு தூத்துக்குடி மாநகரில் உள்ள பெரியசாமிபுரத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அடிப்படை உதவிகளும், தங்குவதற்கு இருப்பிட வசதி மற்றும் 3 நேர உணவுகள் வழங்கி வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை மாநில ஒருங்கிணைப்பாளர் முத்துராஜ் செய்து வருகிறார்.

  • Share on

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா: தூத்துக்குடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

மெட்டில்பட்டி கிராமத்தில் இயற்கை சீற்றம் தனிய சிறப்பு வழிபாடு!

  • Share on