உதயநிதி ஸ்டாலின் 44 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் 44 வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
அதனை முன்னிட்டு, தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடை துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி செயலாளர் ஸ்டாலின் தலைமையில் மாப்பிள்ளையூரணியில் 100 தூய்மை பணியாளர்களுக்கு வேஷ்டி, சேலை ஆகியவற்றை ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார், ஒன்றிய செயலாளர் மாடசாமி ஆகியோர் வழங்கினர்.
நிகழ்ச்சியில், ஒன்றியதுணை செயலாளரும் ஒன்றிய கவுன்சிலருமான அந்தோணி தனுஷ்பாலன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராஜ் சதிஷ், சுபாஷ், கிளைச் செயலாளர்கள் பிரபாகர், நெல்சன் மாவட்ட பிரதிநிதி நெல்சன், கூட்டுறவு கடன் சங்க துணைத் தலைவர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்..
தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சருமான கீதாஜீவன் வழிகாட்டுதலின்படி, தேரடி பகுதியில் சண்முகபுரம் பகுதி இளைஞரணி செயலாளர் சூர்யா தலைமையில் இனிப்புகள் வழங்கி அன்னதானம் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், பகுதி செயலாளர் சுரேஷ்குமார் மாவட்ட பிரதிநிதி சக்திவேல் வார்டு இளைஞரணி செயலாளர் ராஜா, பில்லா கவுதம், பில்லா பாபு, அய்யாசாமி, ராக் இசக்கி உட்பட பலர் கலந்து கொண்டனர்.