பருவமழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த தொடா் மழையால் தாழ்வான பகுதிகளிலும், குடியிருப்புகளிலும் வெள்ளம்போல தண்ணீா் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பெரும்பாலான இடங்களில் மழையால் வீடுகளைவிட்டு மக்கள் வெளியேற முடியாத சூழலில் உணவுப் பொருள்களுக்கு அவா்கள் அவதிப்பட நேரிட்டது.
மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டனர்..
உடன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன்பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், நிர்மல்ராஜ், ஜெயக்குமார், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார், தெற்குமாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர், ஒன்றிய துணைச்செயலாளரும் ஒன்றிய கவுன்சிலருமான அந்தோணிதனுஷ்பாலன், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் ஸ்டாலின், மாவட்ட பிரதிநிதிகள் கதிரேசன், சப்பாணிமுத்து, வட்டச்செயலாளர்கள் ரவீந்திரன், முனியசாமி, அரசு வக்கீல் சுபேந்திரன், போல்பேட்டை பகுதிபிரதிநிதி பிரபாகர், மற்றும் அருணகிரி, சண்முகசுந்தரம், செந்தூர்பாண்டி, கணேசன், மந்திரம், மணி, கிராமநிர்வாக அலுவலர் விக்னேஷ்வரன், ஊராட்சி செயலாளர் ஜெயரத்தினம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.