தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்ப மனு, இன்று முதல் விநியோகம் செய்யப்பட்டது.
மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிக்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், விரைவில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்களிடம் அரசியல் கட்சியினர் விருப்ப மனு வழங்கும் நிகழ்வை துவக்கியுள்ளனர்.
அதனடிபடையில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகத்திற்குட்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி, காயல்பட்டிணம் நகராட்சி, ஸ்ரீவைகுண்டம் , பெருங்குளம், சாயர்புரம், ஏரல், ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம், நாசரேத், தென்திருப்பேரை, ஆத்தூர், ஆறுமுகநேரி, காணம், உடன்குடி ஆகிய பேரூராட்சிகளில் போட்டியிடுவோருக்கு விருப்பமனு விநியோகம் செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சி, தூத்துக்குடி மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் எஸ்.திருப்பாற்கடல் முன்னிலையில் துவங்கியது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் விருப்ப மனுவை வழங்கினார். தூத்துக்குடி மாநகராட்சி 53வது வார்டு சார்பில் போட்டியிட மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக்.ராஜா விருப்பமனுவைப் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், அமைப்பு சாரா ஓட்டுனரணி மாநில இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட துணை செயலாளர் யூனியன் சேர்மன் வசந்தா மணி, ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன், மாவட்ட அணி செயலாளர்கள் தனராஜ், கே.ஜே.பிரபாகர், பில்லா விக்னேஷ், முன்னாள் மாவட்ட அரசு வழக்கறிஞர் கோமதி மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் மாரியப்பன், பகுதி செயலாளர்கள் ஜெய்கணேஷ், பொன்ராஜ், தலைமை கழக பேச்சாளர் முருகாநந்தம், வழக்கறிஞரணி இணை செயலாளர் முனியசாமி, பண்டாரவிளை பாஸ்கர், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் சந்தனபட்டு, முத்துமதி, பகுதி இளைஞரணி செயலாளர் திருச்சிற்றம்பலம், வட்ட செயலாளர்கள் அருண்ராஜா, கொம்பையா, விவசாய பிரிவு எம்.எஸ்.மணி, சாம்ராஜ், சகாயராஜா உட்பட கழகத்தினர் பலர் உடனிருந்தனர்.