• vilasalnews@gmail.com

ஓட்டப்பிடாரம் அருகே வெள்ளம் புகுந்து சிக்கியவர்கள் பத்திரமாக மீட்பு : மீட்பு பணிகளை எஸ்பி நேரில் பார்வை!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஓட்டப்பிடாரம் சுற்றுவட்டார பகுதியில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து சிக்கியவர்களை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். மேலும், மீட்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  நேரடியாக பார்வையிட்டு கண்காணிப்பு மேற்கொண்டார்.

 ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  வாலசமுத்திரம் மற்றும் வெங்கடாசலபுரம் ஆகிய பகுதிகளில் தற்போது பெய்து வரும் கனமழையால் 10 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து, வெள்ளத்தில் சிக்கியிருந்த 25 பேரை ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர்  முத்துராமன் தலைமையிலன போலீசார் மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளனர். ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாலசமுத்திரம், குருவிநத்தம் ஆகிய பகுதிகள் உட்பட மாவட்டத்தில் நடைபெறும் மீட்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  நேரடியாக சென்று கண்காணித்து தகுந்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.

வெள்ளத்தில் வீடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்ட ஓட்டப்பிடாரம் தலைமையிலான போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  பாராட்டினார். இதுபோன்று தொடர்ந்து இந்த பேரிடர் கால மீட்பு பணியை மேற்கொள்ளு மாறும், பொதுமக்களுக்கு உதவுமாறும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணை கண்காணிப் பாளர்கள், காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் பொதுமக்கள் தரைப்பாலங்களை கடந்து செல்வதையும், அனைத்து நீர் நிலைகளிலும் தண்ணீர் நிரம்பி யுள்ளதால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இரவு நேரங்களில் நீர் நிலைகளை கடந்து செல்வதையும் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற நேரங்களில் பொதுமக்கள் தேவையில் லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். தூத்துக்குடி மாவட்;ட காவல்துறையில் மாநில பேரிடர் கால மீட்பு படையினர் மற்றும் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் காவல்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

தற்போது காவல்துறையினர் ஆங்காங்கே மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் அவசர உதவிக்கு காவல் கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் செயல்படும் இலவச தொலைபேசி எண். 100 மற்றும் 95141 44100 என்ற அலை பேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும், மாவட்ட நிர்வாகமும்,  மாவட்ட காவல்துறையும் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருப்பதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார்  தெரிவித்துள்ளார்.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (நவ.26) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு!

நகர்புற உள்ளாட்சி தேர்தல்_ தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக விருப்ப மனு விநியோகம்

  • Share on