தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக நாளை(நவ.26) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தற்போது புதிதாக வங்க கடலில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பலத்த கனமழை பெய்து வருகிறது. இதனால் தூத்துக்குடி உட்பட ஒருசில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.
மேலும், இன்று காலை முதல் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், மதியம் முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டிருந்த நிலையில், கனமழை தீவிரமடைந்துள்ளதால் நவம்பர் 26ம் தேதியான நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.