நகர்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதை யொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுகவினர் அமைச்சர் கீதாஜீவனிடம் விருப்ப மனு அளித்தனர்.
தமிழகத்தில் விரைவில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதை யொட்டி பல்வேறு இடங்களில் திமுகவினர் விருப்ப மனு அளித்து வருகின்றனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவை சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்களிடம் ஏராளமானோர் அளித்தனர்.
அதில் மாவட்ட இளைஞர் அணி துணைச்செயலாளர் பிரதீப், மாநகர துணைச்செயலாளர் கீதாமுருகேசன், முத்தையாபுரம் பகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஓருங்கிணைப்பாளர் பிரசாந்த், ரிச்டா ஆர்தர்மச்சாது, பெல்லா, நாகேஸ்வரி, வட்டச்செயலாளர் சோலையப்பன், ஜாக்குலின் ஜெயா, விஜயலட்சுமி, உள்பட பலர் விருப்பமனுவை சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனிடம் அளித்தனர்.
நிகழ்ச்சியில், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன்பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட தொண்டரணி செயலாளர் ரமேஷ், மாவட்ட இளைஞர் அணி துணைச்செயலாளர் பிரதீப், மீனவரணி துணைச்செயலாளர் சேசையா, பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், மேகநாதன், மாநகர தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பிரபு, தொண்டரணி செயலாளர் முருகஇசக்கி, மருத்துவ அணி செயலாளர் அருண்குமார், மகளிர் அணி செயலாளர் ஜெப்கனி, மாநகர இளைஞர் அணி துணைச்செயலாளர்கள் செல்வின், சங்கரநாராயணன், அருண்சுந்தர், மீனவரணி துணைச்செயலாளர் ஆர்தர்மச்சாது, வர்த்தக அணி துணைச்செயலாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், மாவட்ட பிரதிநிதி கதிரேசன், பகுதி இளைஞர் அணி செயலாளர்கள் ரவி, சூர்யா, வட்டசெயலாளர்கள் சதீஷ்குமார், டென்சிங், ஹாட்லி, சண்முகராஜ், தங்கம், மற்றும் கருணா, கீதா செல்வமாரியப்பன், பிரபாகர், அல்பர்ட், தங்கமாரியப்பன், லிங்கராஜா, பண்டாரசாமி, அர்ச்சுணநாடார், ஆனந்தகுமார், அஜய், மணிகண்டன், குமார், ஜோஸ்வா, கண்ணன், சாம், வெங்கட்ராமன், முன்னாள் கவுன்சிலர் செல்வக்குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி பகுதியில் போட்டியிட பலர் ஆர்வமுடன் வந்திருந்தனர்.