தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல பகுதிகளில் சாலைகளை சீரமைக்கக்கோரி புறநகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செயலாளர் ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புறநகர செயலாளர் ராஜா தூத்துக்குடி மாநகராட்சி உதவி ஆணையருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது :
தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலம் 52,53 வது வார்டு பகுதி பெரும்பாலும் ஏழை எளிய மக்கள் வசிக்கக்கூடிய பகுதியாகும் குறிப்பாக முனியசாமி கோவில் தெரு வடக்கு தெரு பெரியார் நகர் மற்றும் 52-வது வார்டு தோப்புத் தெரு மாணிக்க விநாயகர் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் போக்குவரத்திற்கு பொதுமக்கள் பயன்படுத்தும் தெரு சாலைகள் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது.
மேலும் தற்போது பெய்து வரும் மழையில் தெருக்களில் மழைநீர் குளம்போல தேங்கி பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.
53 வது வார்டு முனியசாமி கோவில் தெரு பிரதான சாலை 10 ஆண்டுகளுக்கு மேலாகவும் பெரியார் நகரில் உள்ள 5 தெரு சாலைகள் சுமார் 15 ஆண்டு களுக்கு மேலாகவும் சீர் அமைக்கப் படாமல் உள்ளது. இது அப்பகுதி மக்கள் தூத்துக்குடி மாநகராட்சியில் நமது பகுதி புறக்கணிக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மேலும் தற்போது 52வது வார்டில் உள்ள தோப்புத் தெரு பிரதான சாலையும், காளியம்மன் கோவில் தெரு சாலையும், கடந்த பல ஆண்டுகளாக தீர்க்கப் படாமல் மழைநீருடன் கழிவுநீர் கலந்து பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
மேற்கண்ட 52 வது வார்டில் தோப்பு மேற்கு பகுதி மாணிக்க விநாயகர் கோவில் தெருவில் 60க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த தெருவில் தூத்துக்குடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு ஒருமுறைகூட சாலை வசதி செய்து தரப்படவில்லை.
மழை காலங்களில் மேற்கண்ட தெருவில் கால்நடையாக கூட நடக்க முடியவில்லை. அந்த அளவிற்கு சேறும் சகதியும் நிரம்பி இருக்கிறது. பள்ளி செல்லும் குழந்தைகள் கூட செல்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே மேற்கண்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு சாலை வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். என குறிப்படப்பட்டுள்ளது.