தூத்துக்குடியில் இரண்டு பிரியாணி வாங்கினால் 1கிலோ தக்காளி இலவசம் என விஐபி பிரியாணி கடை அறிவித்துள்ளது.
தூத்துக்குடி மாநகரில் உள்ள மூன்றாம் கேட் அருகே திண்டுக்கல் விஐபி பிரியாணி கடை இயங்கி வருகிறது.
அண்மையில் தொடங்கப்பட்ட இக்கடையில் இரண்டு பிரியாணி வாங்கினால் 1 கிலோ தக்காளி இலவசம் என அறிவிப்பு வெளியானது.
இச்சலுகை நாளை புதன் கிழமை (24.11.2021 ) முதல் வியாழக்கிழமை (25.11.2021 ) வரை இரண்டு நாட்கள் விற்பனை செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இயற்கை சீற்றத்தால் அழிந்து வரும் விவசாயத்தை ஒன்றுபடுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி வழங்கப்படுவதாக விஐபி ஹோட்டல் உரிமையாளர் கண்ணா பாண்டியன் கூறினார்..