• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் லாரியை திருடிச் சென்ற 2 பேர் கைது!

  • Share on

தூத்துக்குடியில் லாரியை திருடிச் சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து - ரூபாய் 2,75,000 மதிப்பிலான லாரி பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி போல்பேட்டை பகுதியைச் சேர்ந்த சண்முகம் மகன் முருகன் (59) என்பவர் தனக்கு சொந்தமான லாரியை 20.11.2021 அன்று அவரது வீட்டின் பின்புறம் நிறுத்தியுள்ளார்.

மேற்படி இந்த லாரியை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற் கொண்டதில் தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு பகுதியைச் சேர்ந்த கடற்கரை மகன் ரமேஷ் (24) மற்றும் தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் செல்வம் (28) ஆகியோர் சேர்ந்து திருடியது தெரியவந்தது.

இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  சிவராஜா வழக்குப்பதிவு செய்து எதிரிகள் ரமேஷ் மற்றும் செல்வம் ஆகிய இருவரையும் கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 2,75,000/- மதிப்பிலான லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

  • Share on

தூத்துக்குடியில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - போக்ஸோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது!

தூத்துக்குடியில் ஆட்டோ டிரைவர் பட்டபகலில் வெட்டிக்கொலை!

  • Share on