தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ராணுவத்தில் பணிபுரியும் முப்படை ராணுவ வீரர்கள், துணை ராணுவத்தினர் இணைந்து தூத்துக்குடி ஜவான்ஸ் என்ற பெயரில் சமூக சேவை அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
இந்த அமைப்பின் சார்பில் பசுமைத் தூய்மை என்ற பெயரில் மாவட்டத்தில் உள்ள பயணிகள் பேருந்து நிறுத்த நிழற்குடை, அரசு மருத்துவமனை, நூலகம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தி, வர்ணம் பூசி பொதுமக்களுக்கு பசுமை மற்றும் தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று எட்டயபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் நிழற்குடையில் ஒட்டப் பட்டிருந்த விளம்பர போஸ்டர்களை அகற்றி வண்ணம் பூசி தூய்மை செய்தனர்.