• vilasalnews@gmail.com

பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தவர் கைது - 600 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்!

  • Share on

குறுக்குச்சாலை அருகே பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 600 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

ஓட்டப்பிடாரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜா தலைமை யிலான போலீசார் நேற்று (21.11.2021) ரோந்து பணியில் ஈடுபட்ட போது வாலசமுத்திரம் பகுதியில், குறுக்குச்சாலை பகுதியை சேர்ந்த தங்கையா மகன் முனியதுரை (53) என்பவர் தனது பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து ஓட்டப்பிடாரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர்  முத்து ராஜா வழக்குப்பதிவு செய்து மேற்படி  முனியதுரையை கைது செய்து அவரிடம் இருந்த 600 புகையிலை பாக்கெட்டு களை பறிமுதல் செய்தார்.

  • Share on

விக்டோரியா தொடர்ச்சி சாலைக்கு குரூஸ்பர்னாந்து பெயரை சூட்ட வேண்டும் : பரதர் நல தலைமை சங்கம் மனு!

நாட்டின் பாதுகாப்பில் காட்டுவோம் வீரம்... பிறந்த மாவட்டத்திற்கு செய்வோம் பசுமை & தூய்மை : அசத்தும் தூத்துக்குடி ஜவான்ஸ்!

  • Share on