தூத்துக்குடி பரதர் நல சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுவினை மாநகராட்சி ஆணையரிடம் அளித்தனர்.
தூத்துக்குடி பரதர் நல தலைமை சங்கம் சார்பாக பொதுச்செயலாளர் அந்தோணிசாமி, பொருளாளர் காஸ்ட்ரோ, செயலாளர் இன்னாசி, மீன்பிடித் துறைமுக ஓருங்கிணைந்த கூட்டமைப்பு தலைவர் சேவியர்வாஸ், ஆகியோர் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அம்மனுவில் இருப்பதாவது:
தூத்துக்குடி மாநகர தந்தை என அனைவராலும் அன்போடு போற்றப்படும் குடிநீர் கொணர்ந்த முன்னாள் நகர்மன்ற தலைவர் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தின் அவர்களின் உருவ சிலையின் உயரத்தை அதிகரித்து பொதுமக்களின் பார்வைக்கு தெரியும்படி அமைத்து தர வேண்டும்.
விக்டோரியா தொடர்ச்சி சாலைக்கு குரூஸ்பர்னாந்து பெயரை சூட்ட வேண்டும். முன்னாள் தமிழக உணவு அமைச்சராக இருந்த ரோச் விக்டோரியா சிலை ரோச் பூங்காவில் பாராமரிப் பின்றி இருப்பதை சுத்தப்படுத்தி வெண்கல சிலை அமைத்து தர வேண்டும்.
அதே போல் மச்சாது பெயரில் பொதுமக்களால் அமைக்கப்பட்ட பூங்காவில் இரட்டிப்பு செய்யப்பட்டு நேரு பூங்காவாக மாற்றியதை மச்சாது பெயரில் செயல்பட ஆவணம் செய்ய வேண்டும். என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டது.