தூத்துக்குடியில் பா.ஜ.க. கட்சி அலுவலகத்தை மாநிலத் தலைவி மீனாட்சி நித்திய சுந்தரர் திறந்துவைத்தார்.
தூத்துக்குடி, சிவன் கோவில் மேல ரதவீதியில பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகம் திறப்புவிழா மாவட்ட தலைவர் பிஎம் பால்ராஜ் தலைமையில மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் எஸ் சண்முகசுந்தரம் முன்னிலையில நடந்தது. புதிய அலுவலகத்தை கட்சியின் மாநில மகளிர் அணி தலைவர் மீனாட்சி நித்தியசுந்தர் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்
நிகழ்ச்சியில், மாநில செயற்குழு உறுப்பினர் எம் ஆர் கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சந்தனகுமார், முன்னாள் மாவட்ட தலைவர் பாலாஜி, மாநில ஓபிசி அணி பொதுச் செயலாளர் விவேகம் ரமேஷ், மாநில ஓபிசி அணி செயற்குழு உறுப்பினர் சிவராமன், மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் உஷாதேவி, மாவட்ட பொதுச் செயலாளர் விஎஸ்ஆர் பிரபு, மாவட்ட செயலாளர் மான்சிங், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் பாலமுருகன், மண்டல தலைவர்கள் சந்தனகுமார், கனகராஜ், முத்து கிருஷ்ணன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.