தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலைக்கடை தொமுச வின் மாவட்ட கூட்டம் தூத்துக்குடி மாநகரில் நடைபெற்றது.
தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலைக்கடை தொமுச வின் தூத்துக்குடி மாவட்ட பொது உறுப்பினர் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகி வட்டாரம், மாவட்டம் அறிவித்தல், புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு, ஆகிய கூட்டம் தொமுச பொது செயலாளர் பொன்ராம் தலைமையில், மாவட்ட பொறுப்பாளர் வேல்முருகன் முன்னிலையில் தூத்துக்குடி தனியார் ஹோட்டலில் வைத்து நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.
பின்னர், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் போதிய அளவில் இல்லை. எனவே விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களை புதியதாக நியமனம் செய்ய தமிழக முதல்வர் ஆவணம் செய்ய வேண்டும் .
கூட்டுறவு நிறுவனங்களில் கடந்த அதிமுக ஆட்சியாளர்கள் நியமிக்கப்பட்ட நிர்வாக குழுவில் உள்ள அதிமுக நிர்வாகிகள் பல்வேறு முறைகேடுகளை தொடர்ந்து செய்து வருவதால் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துவதுடன் பொது மக்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். எனவே நிர்வாக குழுவை உடனடியாக கலைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும்,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதி தீவிரமாக பெய்ததால் பொது மக்கள் மற்றும் விவசாய பெருங்குடி மக்களும் அதிகப்படியான இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வர் அவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன் நிவாரணப் பொருட்கள் மற்றும் விவசாயிகளுக்கு இழப்பீடு நிவாரணம் அறிவித்திருப்பதை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பரமசிவம் நன்றியுரையாற்றினார்.
இக்கூட்டத்தில் திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் ரவீந்திரன், போக்குவரத்து மாவட்ட கவுன்சில் தலைவர் முருகன், போக்குவரத்து தலைமை நிலை செயலாளர் கருப்பசாமி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல செயலாளர் அருள் பால்சிங், பஞ்சாலை தொமுச கோட்டு ராஜா, சுப்ரமணியன், மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.