நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுகவினருக்கு விருப்ப மனுக்களை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினா் களுக்கான பதவிக்கு போட்டியிட விரும்பும் தி.மு.கவினருக்கு விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், அமைச்சருமான கீதாஜீவன் கலந்துகொண்டு விருப்ப மனுக்களை கட்சியினருக்கு வழங்கினார். இதில் போட்டியிடும் மாநகராட்சி மன்ற உறுப்பினா் பதவிக்கு ரூ.10 ஆயிரம், நகர மன்ற உறுப்பினா் பதவிக்கு ரூ.5 ஆயிரம், பேரூராட்சி மன்ற உறுப்பினருக்கு ரூ.2 ஆயிரத்து 500-ம் கட்டணமாக வாங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், துணைச் செயலாளர் ஆறுமுகம், மாவட்ட தொண்டரணி செயலாளர் ரமேஷ், மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் வக்கீல் பாலகுருசாமி, மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் பிரதீப், மாவட்ட வழக்கிறிஞர் அணி துணைச் செயலாளர் சீனிவாசன், பகுதி செயலாளர் சுரேஷ்குமார், மாநகர பொறியாளர் அணி துணைச் செயலாளர் உலகநாதன், மாவட்ட பிரதிநிதி கதிரேசன், பகுதி இளைஞர் அணி செயலாளர்கள் ரவி, சூர்யா, மற்றும் கீதா செல்வமாரியப்பன், பிரபாகர், அல்பர்ட், தங்கமாரியப்பன், ராஜா, லிங்கராஜா, மகேஸ்வரன் சிங், உள்பட பலர் கலந்து கொண்டனர்.