உயிரிழந்த 720 விவசாயிகளுக்கு தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடி உயிரிழந்த 720 விவசாயிகளுக்கு, காங்கிரஸ் கட்சி சார்பில் இந்தியா முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்படும் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்தார்.
அதன் ஒரு பகுதியாக, காங்கிரஸ் கட்சி சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவரும், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் அவர்கள் தலைமையில் தூத்துக்குடியில் உள்ள பானு பிருந்தாவன் ஹோட்டலில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் TCTU சார்பில் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் நடைபெற்றது.
அப்போது அவர் பேசுகையில், பிரதமர் மோடி மூன்று வேளாண் சட்டத்தையும் ரத்து செய்திருப்பது பல்வேறு நாட்களாக வேளாண்குடி மக்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தியதன் காரணமாக ரத்து செய்திருக்கிறார்..
இப்போராட்டத்தில் விவசாயிகளுக்கு தோளோடு தோள் கொடுத்தவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முதன் முறையாக 3 வேளாண் சட்டத்தை எதிர்த்தவர் ராகுல் காந்தி அவர்கள்
இச்சட்டத்தை ரத்து செய்ய 720 உயிர் பலி ஆகியுறுக்கிறது. அது போல வேளாண் குடி மக்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்பட வேண்டும்.
அது மட்டுமல்ல நீட் தேர்வு, குடியுரிமை சட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும் என கூறினார்.