• vilasalnews@gmail.com

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட 10வது மாநாடு!

  • Share on

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட 10வது மாநாடு தூத்துக்குடி மாநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது..

தூத்துக்குடி மாநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட 10வது மாநாடு தூத்துக்குடியில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து இன்று நடைபெற்றது. இம்மாநாடு 20.11.2021 (சனிக்கிழமை) 21.11.2021 (ஞாயிற்றுகிழமை) ஆகிய இரு நாட்கள் நடைபெறுகிறது. மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சியாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராகவன் செங்கொடியை ஏற்றி வைத்தார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் வாசுகி, சவுந்தராஜன், மாவட்டச் செயலாளர் அர்ச்சுணன், மாநில குழு உறுப்பினர் இரா.மல்லிகா, மாநகரச் செயலாளர் தா.ராஜா ஆகியோர் தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு அஞ்சலி செலுத்தினர்.

தலைமைக்குழு தோழர்கள்  கே.பி.ஆறுமுகம், பி.பூமயில், பி.ஜாய்சன் ஆகியோர் தலைமையில் மாநாடு துவங்கியது.

மாநாட்டில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேருக்கு அஞ்சலி தீர்மானம் முன்மொழியப்பட்டது.

மாநகர செயலாளர் தா.ராஜா வரவேற்புரையாற்றினார், மாநாட்டினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் இ.சௌந்தராஜன் துவக்கி வைத்து பேசினார்.

பின்னர், தீர்மானங்கள் நிரவேற்றப்பட்டது. அதில், தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தை தனி ஆணையமாக மாற்றி தனியார் மயமாக்கும் அனைத்து முயற்சிகளையும் கைவிடக்கோரியும், ஸ்மார்ட் சிட்டி என்கிற பெயரில் முறையான திட்டமிடலும், ஒருங்கிணைப்பும் இன்றி, மேற்கொள்ளப்பட்டு வரும் தூத்துக்குடி மாநகர் மேம்பாட்டு கட்டமைப்பு பணிகளை முறைப்படுத்தி விரைந்து முடிக்க வேண்டும்.

திருவைகுண்டம் தடுப்பனைக்கு கீழ் பகுதியில் லோயர் டேம் அமைத்து மழைக்காலத்தில் கடலில் கலந்து வீணாகும் தண்ணிரை தேக்கி வைத்து விவசாயம், குடிநீர் பயன்பாட்டிற்கு பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும்.

மூன்று லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளித்து வரும் தீப்பட்டி தொழில் மூலப்பொருள் தட்டுபாட்டை போக்கியும், குடிசை, மற்றும் பகுதி இயந்திரமை யமாக்கப்பட்ட தீப்பட்டிகளுக்கு வரிச்சலுகை அளிக்கவும், தீப்பட்டி தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும்,  

விடுதலை போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு அவர் கடைசியாக நீதிமன்ற பனி செய்த கோவில்பட்டி நீதிமன்ற வளாகத்தில் சிலை அமைக்க வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

  • Share on

இலவச வீட்டுமனைபட்டா, மயான மேடை அமைத்து தர வேண்டி முடிதிருத்துவோர் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தூத்துக்குடியில் பயிற்சி பல் மருத்துவரை கடத்தி தாக்கியதாக திமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது!

  • Share on