சிஜடியூ தூத்துக்குடி மாவட்ட மருத்துவர் மற்றும் முடிதிருத்துவோர் சங்கத்தின் சார்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது..
தூத்துக்குடி முடி திருத்தும் தொழிலாளருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட வேண்டியும், விளாத்திகுளம் வேம்பார் ஊராட்சியில் சுடுகாடு தகனமேடை ( மயானம் ) நிரந்தரமாக அமைத்திட கோரியும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது..
பின்னர், மாவட்ட ஆட்சியர் தொழில் தொடங்க தேவையான கடன் உதவிகளை பெற்றுத் தருவதாகவும் உறுதி அளித்தார் .
உடன், மாவட்ட நிர்வாகிகள் டென்சிங் , நாகராஜன், சரவணன், கண்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர்...