• vilasalnews@gmail.com

வேளாண் சட்டங்களை திரும்ப பெற கொடுக்கப்பட்ட அழுத்தம் நீட் தேர்வை திரும்ப பெறுவதற்கும் கொடுக்கப்படும் - கனிமொழி எம்.பி!

  • Share on

வேளாண் சட்டங்களை திரும்ப பெற கொடுக்கப்பட்ட அழுத்தத்தை நீட் தேர்வை திரும்ப பெறுவதற்கும் அழுத்தம் கொடுக்கப்படும் என தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெளிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவுத்துறையின் 68வது வார விழா தூத்துக்குடி உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு  மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில் ராஜ் தலைமையேற்றார். தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், முதலாவதாக சங்கத்தின் கொடி ஏற்றபட்டது. பின்னர், குத்துவிளக்கு ஏற்றப்பட்டு கூட்டுறவு உறுதிமொழி எம்பி கனிமொழி  முன்னிலையில் எடுக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து 2,030 பயனாளிகளுக்கு 13 கோடி ரூபாய் மதிப்பிலும், 101 மாற்றுத் திறனாளிகளுக்கு சுமார் 41 லட்ச ரூபாய் மதிப்பில் கடன் உதவிகளும் கனிமொழி எம்பி மற்றும் அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் வழங்கினர். மேலும் கூட்டுறவு துறையில் சிறப்பாக பணியாற்றிய கூட்டுறவு பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

பின்னர், செய்தியாளர்களிடம் கனிமொழி எம்பி கூறுகையில்:

வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டது  மகிழ்ச்சி அளிக்கிறது. இத்திட்டங்கள் கொண்டு வரப்பட்ட நாட்களில் இருந்து விவசாயிகள் அதை எதிர்த்து போராடி வருகின்றனர். திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் தொடர்ந்து மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்துள்ளது. இந்த நிலையில் திமுக ஆட்சி பொருப்பேற்றதும் சட்டமன்றத்தில் 3 வேளாண் சட்டங்க ளையும் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், மத்திய அரசு வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என அறிவித்திருப்பது ஜனநாயகத்திற்கு கிடைத்த மிக பெரிய வெற்றி என கூறிய அவர், வேளாண் சட்டம் திரும்ப பெறப்பட்டது நமது உரிமைகளுக்காக தொடர்ந்து போராடினால் நிச்சயம் எதையும் திரும்ப மீட்டு எடுக்க முடியும் என்பதை குறிக்கிறது.

வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதற்கு கொடுக்கப்பட்ட அழுத்தத்தை நீட் தேர்வை திரும்பப் பெறுவதற்கும் எதிர்க்கட்சிகள் கொடுக்கும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சிவகாமி, திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

கந்து வட்டிக்கு கடன் கொடுத்து பணம் வசூலிப்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் : தூத்துக்குடி எஸ்பி கடும் எச்செரிக்கை!

இலவச வீட்டுமனைபட்டா, மயான மேடை அமைத்து தர வேண்டி முடிதிருத்துவோர் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

  • Share on