தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சார்பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின் றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள சிவகளை கிராமத்தி த் வசித்து வருபவர் ரவிச் சந்திரன்(45). இவரது மனைவி சுதா(32). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ரவிச்சந்திரன், கடந்த 2020ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.
கடந்த டிசம்பர் மாதம், லஞ்ச ஒழிப்பு போலீசார் விளாத்திகுளம் அலுவலகத்தில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.3.75 லட்சம் பிடிபட்டது. இதையடுத்து அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து அவர் தற்போது கும்பகோணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது ஒருவார மருத்துவ விடுப்பில் உள்ள நிலையில் சொந்த ஊரில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் போலீசார் ஏரல் அருகே சிவகளையில் ரவிச் சந்திரன் வீட்டில் காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்ற னர். இதையொட்டி வெளி நபர்கள் வீட்டில் நுழைய அனுமதிக்கப் படவில்லை. இந்த சோதனையின் போது ரவிச்சந்திரன், தனது பணிக்காலத்தில் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளது தெரியவந்துள்ளது.
தனது மாமனார் சுந்தர்ராஜ் பெயரில் தூத்துக்குடி பிரையன்ட் நகர் 3வது தெருவில் அப்பார்ட் மென்ட் கட்டியுள்ளது தெரியவந்து ள்ளது. இதுபோல் அதே பகுதியில் 2வது தெருவில் மனைவி சுதா பெயரில் புதிதாக வீடு வாங்கி உள்ள தகவல் வெளியாகியுள்ளது. சார்பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருவது அப்பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.