காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.
அசாம் மாநிலம் மங்கட் டாய் மாவட்டத்தைச் சேர்ந்த முனாப் அலி மகன் அலிமுதீன் (25) என்பவர் கோவில்பட்டியில் தங்கி வேலை செய்து வருகிறார். இவர் 17 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள் ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நாக குமாரி போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அலிமு தீனை கைது செய்து சிறையில் அடைத்தார்.