சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெற தகுதியானவர்கள் நவ.30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சமூக நீதிக்காக பாடுபட்டவர்களை சிறப்பு செய்வதற்காக ‘சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” 1995 முதல் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூபாய் ஒரு லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும், தகுதியுரையும் வழங்கப் படுகிறது. இவ்விருதாளர் முதலமைச்சர் அவர்களால் தேர்வு செய்யப்படுகிறார்.
2021-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசு ‘சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ள ப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப் பத்தினை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு விண்ணப்பிக்கலாம்.
தங்களது விண்ணப்பம் தங்களின் சுயவிவரம். முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். 2021 ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப் பங்கள் மாவட்ட ஆட்சியருக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 30.11.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது தெரிவிக்க லாகிறது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.