தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் மற்றும் கயத்தாறு பகுதிகளில் கன மழையால், பாதிக்கப்பட்ட பயிர்களை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் இன்று (17.11.2021) கள ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தெரிவித்ததாவது:
கருங்குளம் வட்டாரம் பகுதியில் கீழபுத்தநேரி கிராமத்தில் பிந்தைய கார் பருவ சாகுபடியில் சாகுபடி செய்த நெற்பயிர் அறுவடை நிலையில் பாதிப்படைந்ததை ஆய்வு செய்யப் பட்டது. அப்போது நெற்பயிர் அறுவடை நிலையில் மணிகள் வயலிலே முளைப்பு ஆனவற்றையும், மேலும் 5.28 எக்டர் பரப்பளவில் 11 விவசாயிகளின் பயிர் பாதிப்படைந்தது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
தொடர்ந்து, கயத்தார் வட்டாரம் அச்சங்குளம் கிராமத்தில் புளியங்குளம் குளத்துப் பாசனப்பகுதியில் சாகுபடி செய்த நெல், மக்காச்சோளம், உளுந்து மற்றும் பருத்தி பயிர்கள் மழை வெள்ளத்தால் சேதமடைந்தவற்றையும் ஆய்வு செய்யப்பட்டது. பிந்தைய கார் பருவ நெல் அறுவடை நிலையில் அச்சங்குளம் கிராமத்தில் நெற் பயிர்:21.49 எக்டர், மக்காச்சோளம்: 8.61 ஹெக்டேர், உளுந்து: 5.11 எக்டர், பாசிப் பயறு:1.32 எக்டர், பருத்திப்பயிர்: 2.01 எக்டர் ஆக மொத்தம் 38.54 எக்டர் பரப்பளவில் 49 விவசாயிகள் சாகுபடி செய்தது பாதிப்படைந்துள்ளது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதிப்புகள் மற்றும் விவசாயிகள் கோரிக்கையின் மீது தனி கவனம் செலுத்தி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது வேளாண்மைத் துறை இணை இயக்குநர் எஸ்.ஐ.முகை தீன், கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாராயணன், கருங்குளம் மற்றும் துணை வேளாண்மை இயக்குநர்கள், கயத்தார் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் உட்பட அரசு அலுவலர் கள் உடனிருந்தனர்.