• vilasalnews@gmail.com

போக்குவரத்து காவலர்துறையினருக்கு ” மழை நீர் புகா ” உடைகள் : ரோட்டரி சங்கம் சார்பாக எஸ்பி வழங்கினார்

  • Share on

தூத்துக்குடியில் அடைமழையிலும், விடாது பணி செய்யும் போக்குவரத்து காவல்துறையினருக்கு  ” மழை நீர் புகா ”( ரெயின் கோட் ) உடைகளை ரோட்டரி சங்கம் சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வழங்கினார்.

தூத்துக்குடியில் அடாது மழையிலும் விடாது பணி செய்யும் போக்குவரத்து காவல்துறையினரின் சேவையை பாராட்டியும், அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் தூத்துக்குடி ரோட்டரி கிளப் சங்கம் சார்பாக போக்குவரத்து காவல்துறையினருக்கு மழை நீர் புகா உடைகளை (Rain Coat) வழங்கியுள்ளனர்.


வி.வி.டி சிக்னல் சந்திப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார்,  போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் உட்பட 60 போக்குவரத்து காவல்துறையினருக்கு வழங்கினார். 

மேலும் பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தி கபசுரக்குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியை ரோட்டரி கிளப் ஆப் பியர்ல்சிட்டி தலைவர் ஜூடு ஆரோக்கிய அன்டனி, செயலாளர் மகாலிங்கம், பியர்ல்சிட்டி கிளப் (உதவி ஆளுநர் பாலமுருகன், முன்னாள் தலைவர்கள் பாலாஜி, பொதிகை கண்ணன், சிவராம கிருஷ்ணன், விஜயன், உதவி தலைவர்கள் ராஜா, உறுப்பினர்கள் செந்தில் ஆறுமுகம்,  மகராஜன், முத்துராமன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

விளாத்திகுளம் தொகுதியில் சின்னப்பன் எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு

தூத்துக்குடி துறைமுகத்தில் 6 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

  • Share on