தூத்துக்குடியில் உரக்கடை உரிமையாளரிடம் தகராறு செய்து கம்பால் தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதியை சேர்ந்தவர் வைரவேல் மகன் அன்பழகன்(55). இவர் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எட்டையபுரம் ரோடு பகுதியில் உரக்கடை நடத்திவருகிறார். இந்த உரக்கடையில் தூத்துக்குடி மாப்பிளையூரணி பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் அய்யாத்துரை (23) என்பவர் தினமும் 2,000/- ரூபாய்க்கு கால்நடை தீவனம் வாங்கி வந்துள்ளார்.
இந்நிலையில் மேற்படி மாரிமுத்து அன்பழகனிடம் தினமும் வாங்கும் கால்நடைதீவனத்திற்காக கமிஷன் தொகை கேட்டுள்ளார். இதனை அன்பழகன் மறுத்துள்ளார். இதன் காரணமாக இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த முன்விரோதம் காரணமாக கடந்த 14.11.2021 அன்று அய்யாத் துரை, தூத்துக்குடி ஆரோக்கிய புரத்தை சேர்ந்த மாணிக்கம் மகன் சஞ்சய் (20) மற்றும் சிலர் சேர்ந்து அன்பழகனிடம் தகராறு செய்து கல் மற்றும் கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அன்பழகன் அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கர் வழக்கு பதிவு செய்து மேற்படி அய்யாத்துரை மற்றும் சஞ்சய் ஆகிய இருவரையும் கைது செய்தார். மேலும் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.