விளாத்திகுளம் அருகே பயிர் அடங்கல் வழங்க ரூபாய் 100 வசூலிப்பதாக புகார் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு கடந்த 9ஆம் தேதி அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் உளுந்து பயிருக்கு காப்பீடு செய்ய நேற்று கடைசி நாள் ஆகும். இதனால் விளாத்திகுளம் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகங் களில் விவசாயிகள் பயிர் அடங்கள் பெற குவிந்தனர். இரவு பகலாக அடங்கல் வழங்கும் பணி நடந்து வந்தது.
இந்நிலையில், விளாத்திகுளம் அருகே ஒரு கிராம நிர்வாக அலுவலகத்தில் ஒருவர் வீடியோ எடுத்து, அதனை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை பதிவு செய்தவர் கேள்விகளை கேட்க விவசாயி ஒருவர் பதிலளிக்கிறார்.
வீடியோவில் நான் 4 நாட்களாக இங்கு வருகிறேன் ஆனால் புளியங்குளம் மாலுக்கு அடங்கல் வழங்குகின்றனர். எனது பெயரை பட்டியலில் எழுதி வைத்துள்ளனர் .ஆனால் வராத ஆளுக்கு அடங்கல் போட்டு கொடுக்கி ன்றனர். அடங்கல் வழங்க 100 ரூபாய் வாங்குகின்றனர் என விவசாயி கூறுகிறார்.
பின்னர் வீடியோ எடுத்தவர் அப்படியே கிராம நிர்வாக அலுவலரிடம் உங்கள் மீது புகார் வருகிறது. அது தொடர்பாக வீடியோ எடுத்துள்ளேன். அடங்கல் வழங்க 100 ரூபாய் வாங்குகிறீர்களாமே? 100 ரூபாய் வாங்கச் சொல்லி உள்ளனரா என கேட்கிறார். அதற்கு அவர்கள் கொடுத்து விட்டுச் செல்கின்றனர்? உங்களுக்கு என்ன பிரச்சனை என வி.ஏ.ஓ கேட்கிறார். மேலும் நான் யாரிடமும் கட்டாயப்படுத்தி கேட்க வில்லை என்கிறார். அதற்கு அந்த நபர் அவர்களாக கொடுக்கின்றனரா? என கேட்டதற்கு ஆம் கொடுக்கின்றனர் என விஏஓ தெரிவிக்கிறார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த வீடியோவில் இருந்தது குறித்து விசாரித்தபோது மார்த்தாண்டம் பட்டி கிராம நிர்வாக அலுவலர் வினோத் என்பது தெரியவந்துள்ளது. மார்த் தாண்டம் பட்டியுடன் சேர்த்து புளியங் குளம் கிராமத்தை இவர் கூடுதலாக கவனித்து வருகிறார். இது குறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரித்த போது வீடியோ சமூக வலைதளங்களில் வந்தது குறித்து ஆர்டிஓ விடம் தெரிவி த்து உள்ளோம் என்றனர்.